Sunday 10 February, 2008

இன்னாசெய் தாரை.....

உடுப்பி(கர்நாடகா) அருகில் நடந்த உண்மை சம்பவம். 1988ம் வருடம் ஒரு ஏழைக்குடும்பத்தில் பிறந்தது அந்த பெண் குழந்தை. தூக்கி கொண்டாட வேண்டிய பெற்றோர்களுக்கோ அதிர்ச்சி. காரணம்! பிறந்த பொழுதே அந்த குழந்தைக்கு இரண்டு கால்களும் இரண்டு கைகளும் இல்லை. விளைவு! பெற்றோர்களால் பிரசவ மருத்துவமனையிலேயே அநாதையாக்கப்பட்டாள் அந்த குழந்தை. மருத்துவமனையிலிருந்து அநாதை ஆசிரமத்திற்கு மாற்றப்பட்ட அந்த குழந்தையை முறைப்படி தத்தெடுத்தார் அமெரிக்காவை சேர்ந்த ஒருவர்.

இன்று Minda Cox என்ற பெயருடன் இருபது வயது குமரியாகிவிட்ட அந்த குழந்தை ஒரு ஓவியர். (அவர் வரைந்த ஓவியங்கள் சில கீழே உள்ள video’வில்)

http://www.news-leader.com/galleries/slideshows/artist/

இரண்டு கைகளும் இரண்டு கால்களும் இல்லாத நிலையில் அவரது ஓவியத்திறமை அசாத்தியமானது என்றாலும் அதை விட என்னை கவர்ந்த ஒன்று தன்னை பெற்றெடுத்த தாய் தந்தையருக்கு அவர் எழுதியிருந்த ஒரு கடிதமும் அதன் பின்னர் அவர்களிடையே நடந்த உரையாடலும். அந்த கடிதத்தின் சில முக்கியமான வரிகள் கீழே,

““My dream has been to contact you... I have been thinking of you and want you to know how grateful I am to you for keeping me alive and taking me to the hospital... I can take care of myself very well. I use an electric wheelchair. I take classes in University and am becoming an artist... Someday, I would like to meet you and thank you for loving me.”

பத்திரிக்கைகளில் வெளியான இந்த கடித்த்தின் மூலம் உண்மையான பெற்றவர்கள் கண்டறியபட்டு அவர்களை சந்தித்தார் Minda Cox. அப்போது நடைபெற்ற உரையாடலின் சில முக்கிய பகுதிகள் கீழே

“I knew we did not have the means to take care of you. We were very poor and lived in a mud hut those days.” But “why” was not a question Minda had come to seek an answer to. She had come, she said, to seek reassurance that she would be accepted with her disability, and to reassure her family that she was well. “I did not know if you even wanted to meet me,” said Minda to Kalavathi. “And now I feel so strong here, safe in your arms.”

எந்த ஒரு சூழ்நிலையிலும் என்னை அநாதையாக விட்டு சென்று விட்டாயே என கோபப்படவில்லை. தன்னை தத்தெடுக்க யாரும் இல்லாது போயிருந்தால் தன் நிலைமை என்னவாகியிருக்கும் என குறைபட்டு கொள்ளவில்லை. மாறாக இந்த உலகத்தில் வாழ தனக்கு ஒரு வாய்ப்பளித்ததற்காக நன்றி கூறினார்.

கஷ்டப்பட்டு வளர்த்த பெற்றோர்களையே பிள்ளைகள் மறந்து விடும் இந்த காலத்தில், தன்னை அநாதையாக்கிய பெற்றோர்களை தேடி வந்த “Minda Cox” மனதளவில் இன்னும் ஒரு குழந்தைதான் (ஆம்! ஏனெனில் குழந்தைகளால் மட்டுமே தீயவற்றை மறந்து வாழ முடிகிறது)

Source:


Friday 1 February, 2008

புரியாத புதிர்

இந்த வருட பொங்கலுக்கு சன் டி.வி'யில் தனுஷ் நயந்தாரா பேட்டியை ஒளிபரப்பினார்கள். பேட்டியின்போது நயந்தாராவையும் மீறி (ஹீ..ஹீ...) தனுஷ் சொன்ன ஒரு விஷயம் என்னை வெகுவாக கவர்ந்தது.

கேள்வி: உங்கள் மாமனார் ரஜினி ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். நீங்கள் எப்படி?

பதில் (தனுஷ்): ஆன்மீகத்தை பத்தி பேசரதெல்லாம் ரொம்ப கஷ்டம் சாதாரண விஷயமில்லை. ஆனா ஒரே ஒரு point சொல்லிடறேன். கடவுளை முழுக்க முழுக்க நம்பறதும் கஷ்டம், முழுக்க முழுக்க நம்பாம இருக்கிறதும் கஷ்டம்.

முழுக்க முழுக்க நம்பறவனுக்கு "ஒரு வேளை இல்லாம இருந்தா" அப்படின்னு ஒரு சந்தேகம் இருக்கும். அதே மாதிரி முழுக்க முழுக்க நம்பாம இருக்கிறவனுக்கும் "ஒரு வேளை இருந்துட்டா" அப்படினு ஒரு பயம் இருக்கும். ஒன்னு இத செய்யனும் இல்ல அத செய்யனும் நடுவுல இருந்தா Waste. 90% பேர் நடுவுல இருக்கவங்கதான்.


http://www.blog.isaitamil.net/?p=1943

கடவுள் மனம் சம்பந்தப்பட்ட விஷயமாகவும், அறிவியல் அறிவு சம்பந்தப்பட்ட விஷயமாகவும் பார்க்கப்படுகிறது! மனத்தின் பேச்சை கேட்பதா இல்லை அறிவின் பேச்சை கேட்பதா என்ற குழப்பம் என்றைக்குமே மனிதனுக்கு தீராத ஒன்று! அதுவரை கடவுளும் ஒரு புரியாத புதிர்தான்!