Showing posts with label காதல் சூடு. Show all posts
Showing posts with label காதல் சூடு. Show all posts

Sunday, 29 April 2007

காதல் சூடு

காதலுக்கு கண்ணில்லை என்பார்கள்…
ஆனால் சூடு, சொரணை கூட இல்லை என்பது ஹம்பி சென்றபோதுதான் எனக்கு தெரிய வந்தது…
தவறான அர்த்தத்தில் சொல்லவில்லை…
கீழே உள்ள புகைப்படத்தை பாருங்கள்.




இடம் : ஹம்பி (கர்நாடகா)
நேரம் : மதியம் சுமார் 12 மணி
காலம் : கோடை (02-April-2007)

ஊர் முழுக்க பாறைகளும், சிதிலமடைந்த கோயில்களுமே. திரும்பிய பக்கமெல்லாம் வெய்யில் சுட்டெரித்தது. சுற்றுலா சென்ற எங்களுக்கு சூடு தாங்கவில்லை (அட!! வெய்யிலோட சூட்டைதாங்க சொன்னேன் :-) ). ஆனா அவங்களுக்கு romance!!!! அவங்க sorroundings’அ பார்த்தா உங்களுக்கே புரியும். அவங்க உட்கார்ந்திருக்கிற இடத்தையும் அடிக்கற வெயிலயும் வச்சு பார்த்தா நிச்சயமா அவங்க காலைல ஒரு 7 - 8 மணிக்கே வந்திருப்பாங்கன்னு நெனைக்கிறேன் இல்லைனா அவங்க உக்காந்திருக்கிற பாறை மேல கைய கூட வைக்க முடியாது :-)

ஹூம்ம்ம்… ஒரு வேளை காதல் சூட்டின் முன் வெயிலும் குளுமைதானோ!!! ;-)

பி.கு: ஹம்பியின் கோடைகால வெப்பநிலை – 37 முதல் 41 degree Celsius (ஆமா degree celsius’க்கு தமிழ்’ல ஏதாவது வார்த்தை இருக்கா? )