Sunday, 29 April 2007

காதல் சூடு

காதலுக்கு கண்ணில்லை என்பார்கள்…
ஆனால் சூடு, சொரணை கூட இல்லை என்பது ஹம்பி சென்றபோதுதான் எனக்கு தெரிய வந்தது…
தவறான அர்த்தத்தில் சொல்லவில்லை…
கீழே உள்ள புகைப்படத்தை பாருங்கள்.




இடம் : ஹம்பி (கர்நாடகா)
நேரம் : மதியம் சுமார் 12 மணி
காலம் : கோடை (02-April-2007)

ஊர் முழுக்க பாறைகளும், சிதிலமடைந்த கோயில்களுமே. திரும்பிய பக்கமெல்லாம் வெய்யில் சுட்டெரித்தது. சுற்றுலா சென்ற எங்களுக்கு சூடு தாங்கவில்லை (அட!! வெய்யிலோட சூட்டைதாங்க சொன்னேன் :-) ). ஆனா அவங்களுக்கு romance!!!! அவங்க sorroundings’அ பார்த்தா உங்களுக்கே புரியும். அவங்க உட்கார்ந்திருக்கிற இடத்தையும் அடிக்கற வெயிலயும் வச்சு பார்த்தா நிச்சயமா அவங்க காலைல ஒரு 7 - 8 மணிக்கே வந்திருப்பாங்கன்னு நெனைக்கிறேன் இல்லைனா அவங்க உக்காந்திருக்கிற பாறை மேல கைய கூட வைக்க முடியாது :-)

ஹூம்ம்ம்… ஒரு வேளை காதல் சூட்டின் முன் வெயிலும் குளுமைதானோ!!! ;-)

பி.கு: ஹம்பியின் கோடைகால வெப்பநிலை – 37 முதல் 41 degree Celsius (ஆமா degree celsius’க்கு தமிழ்’ல ஏதாவது வார்த்தை இருக்கா? )

Saturday, 28 April 2007

குழந்தை பெறாத தாய்

இந்த வருட ஆங்கில புத்தாண்டு அன்று சன் டி.வி.யில் ஒளிபரப்பான பட்டிமன்ற நிகழ்ச்சியில் ஒரு பேச்சாளர் சொன்ன கவிதை,

“நான் இறந்து போனால் என் கட்டில் கால்களைக் கொண்டு சின்னஞ்சிறார்களுக்கு நடைவண்டி செய்து கொடுங்கள்.
நான் இறந்து போனால் என்னை எரித்து விடாதீர்கள் புதைத்து விடுங்கள்,
அப்போதாவது என் வயிற்றில் புழு, பூச்சி உண்டாகட்டும்.”


குழந்தை பெறாத ஒரு தாயின் மன வலியை இதை விட அழுத்தமாக சொல்ல முடியுமா???

Friday, 27 April 2007

படித்தது

பல வருடங்களுக்கு முன்னால் “தினமலர் – சிறுவர் மலர்” இதழில் கேட்கப்பட்ட கேள்வி இது.ஏனோ மனதில் மிக ஆழமாக பதிந்து விட்டது. உங்களுக்கு விடை தெரிகிறதா எனப்பாருங்கள்.

முன்னுரை

ம்ம்ம்ம்… ரெண்டு நாளா யோசிச்சு யோசிச்சு பார்த்தேன்…
கவிதை எல்லாம் எழுதற அளவுக்கு நமக்கு அறிவு கெடையாது…
சரி கதை??!!! வேற வெணையே வேணாம்..
விமர்சனம் பன்றதுக்கு நம்ம மொதல்ல எல்லா விஷயத்துலயும் correct’ஆ இருக்கனும்… so அதுவும் ஒத்து வராது…
நம்ம சொந்தமா ஏதாவது யோசிச்சு பண்றதுதானே கஷ்டம். நாம பல இடங்களில் பார்க்கிற, ரசிக்கிற நல்ல/கெட்ட விஷயங்களை எழுதலாமே’னு தோனுச்சு. so அதையே follow பண்ணலாம்னு முடிவு பண்ணிருக்கேன்.
அதுக்காக ரொம்ப serious’ஆ யோசிச்சு எழுதவும் நமக்கு வராது. அதனால அப்படியே போற போக்குல என்னென்ன தோனுதோ அதை எல்லாம் எழுதிகிட்டே போறேன். பார்ப்போம் எந்த அளவுக்கு work out ஆகுதுன்னு ;-)

எல்லாத்துக்கும் மேல முக்கியமான விஷயம் மேலே ஏற்கனவே சொன்ன மாதிரி கதை, கவிதை எல்லாம் எழுதும் ஆள் நான் இல்லை. இந்த BLOG என்னை impress செய்த பல விஷயங்களின் தொகுப்பு அவ்வளவே!!! நீங்கள் தமிழ் இலக்கிய ஆர்வத்தோடு இந்த பக்கத்திற்கு வந்திருந்தால்...மன்னிக்கவும்… Google உங்களை தவறான முகவரிக்கு அழைத்து வந்திருக்கிறது.

Wednesday, 25 April 2007

யோசனை…

ஏதாவது எழுதணுமே....
ம்ம்ம்ம்ம்….
யோசிப்போம்…