Tuesday, 19 June 2007

தீக்குச்சிப் பெண்கள்

வெயில் திரைப்படம் பார்த்தீர்களா? அதில் வரும் பாண்டியம்மா (ஷ்ரேயா ரெட்டி) சந்தேக புத்தி உடைய தன் கணவனைப் பற்றி தன் பால்ய நண்பன் முருகேசனிடம் (பசுபதி) புலம்பி விட்டு சொல்லுவாள்,

“பொறந்ததிலருந்தே இந்த தீப்பெட்டிக்குத்தான் வாழ்க்கைப் பட்டிருக்கேனோ என்னமோ!!!”.

படம் பார்த்த பிறகு ராஜ் எழுதிய ஒரு கவிதை

தீப்பெட்டிக்கு வாழ்க்கைப்பட்டாள் அவள்,
உறசி தேய்த்தப்பின்
தீப்பெட்டி சேர்த்துகொள்ள மறுத்தது
தீக்குச்சியான அவளை!

-த.ராஜசேகர்

Friday, 15 June 2007

Autopsy of Human body

சில நாட்களுக்கு முன்னால் மருத்துவத்துறையில் இருக்கும் நண்பர் ஒருவர் “Autopsy of Human Body”என்ற தலைப்பில் ஒரு Google Video’வின் Link’ஐ அனுப்பி இருந்தார்.

சுமார் இருபது நிமிடம் ஓடக்கூடிய video அது. ஒரு மேசையின் மீது ஒரு உடல் கிடத்தப்பட்டிருக்கிறது. மருத்துவர் ஒருவர் அந்த உடலை ஒவ்வொரு பாகமாக அறுத்து எடுத்து அந்த பாகத்தை பற்றி விவரிக்கிறார். ஒவ்வொரு பாகத்தின் பெயரையும் சொல்லி அதுஎப்படி இருக்கிறது எப்படி இருந்திருக்க வேண்டும் என விவரிக்கிறார்.

மருத்துவர் என்னவோ ஒழுங்காகத்தான் விளக்குகிறார் ஆனால் எனக்குத்தான் ஒவ்வொரு பாகத்தையும் வெட்ட வெட்ட ஏதோ கசாப்புக்கடையில் இருப்பது போன்ற உணர்வு. ஒருவேளை மருத்துவம் படித்தவர்களுக்கு அந்த மாதிரி தோணாதோ என்னவோ!!!

சற்று கடுமையாகத் தோன்றியதால் அந்த video’வை embed செய்யாமல் link’ஐ மட்டும் கீழே கொடுத்துள்ளேன். சின்ன sample’ஆக ஒரு காட்சியின் Thumbnail picture கீழே இருக்கிறது. (படத்தை என்னால் முடிந்த அளவு சிறியதாக கொடுத்திருக்கிறேன், பெரிதாக பார்க்க படத்தின் மீது click செய்யுங்கள்). இந்த video’வை பார்ப்பதா வேண்டாமா என அந்த படத்தை பார்த்து முடிவு செய்து கொள்ளுங்கள்.


எச்சரிக்கை: தைரியசாலிகள் போல் நடிக்கத் தெரியாதவர்கள் இந்த video’வை தவிர்ப்பது நல்லது

Wednesday, 13 June 2007

மீண்டும் SEZ

விவசாயிகளின் SEZ எதிர்ப்பு போராட்டத்தை கையாள மேற்கு வங்க அரசும் JSW Steel நிறுவனமும் சேர்ந்து ஒரு புது மாதிரியான திட்டத்தை முன் வைத்திருக்கிறார்கள். இந்த திட்டத்தின்படி SEZ’க்காக நிலம் கொடுக்கும் ஒவ்வொருவருக்கும் அந்த நிலத்திற்கான பணத்தை தருவதுடன் அவர்களின் குடும்பத்திலிருந்து ஒருவருக்கு அங்கு கட்டப்படும் தொழிற்சாலையில் வேலை வழங்கப்படும். மேலும் நிலம் கொடுக்கும் ஒவ்வொருவருக்கும் அந்த தொழிற்சாலையின் பங்குகளும் அளிக்கப்படும்

இதில் இரண்டு விஷயங்கள். ஒன்று நிலத்தை இழந்தாலும் அங்கே கட்டப்படும் நிறுவனத்தில் வேறு வேலை கிடைப்பதால், இதுவரை விவசாயத்தை மட்டுமே நம்பி குடும்பம் நடத்தி வந்த மக்களுக்கு ஒரு புது வாழ்க்கை கிடைக்க வழி பிறந்திருக்கிறது.

இரண்டாவது அந்த தொழிற்சாலையின் பங்குகள் அளிக்கப்படுவதால் நிலம் கொடுக்கும் ஒவ்வொருவரும் அங்கு கட்டப்படும் தொழிற்சாலையில் பங்குதாரர்களாகின்றனர். இதனால் நிலம் கையை விட்டு போனாலும் அதற்கு சமமாக ஒரு நிறுவனத்தின் பங்குகள் அவர்களிடம் வந்து சேருகிறது.

இதுவரை விவசாயம் மட்டுமே செய்து வந்த மக்களுக்கு அந்த தொழிற்சாலையில் என்ன மாதிரி வேலை கிடைக்கும் என்பது இன்னும் சரியாக தெரியவில்லை. எப்படியிருந்தாலும் இந்த திட்டம் குறைந்தபட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்காவது வழி வகுக்கும். இந்த யோசனை சற்று காலதாமதமானதுதான் என்றாலும் “Better Late than Never” என்றுதான் நினைக்க தோன்றுகிறது.

இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகள் காப்பாற்றப்படுவார்கள். சந்தோஷம்!!
ஆனால் விவசாயம்? அதை எப்போது காப்பாற்றப்போகிறோம்??

Monday, 4 June 2007

தலைக்கவசம் தலைக்கு அவசியம்

Helmet அவசியமானதா இல்லையா? இதை விவாதிக்க எத்தனை பதிவுகள்!!! விட்டால் சிவாஜி பட range’க்கு discuss பண்ணுவாங்க போல. ஊருக்குப் போனா அங்கேயும் இதே பேச்சுதான்

“இதெல்லாம் city’ல ok! கிராமத்துலயெல்லாம் ஒத்து வராது”

“வண்டி ஒட்டுறவங்களுக்கு ok ஆனா பின்னாடி உக்காந்து போறவங்களுக்கு helmet எல்லாம் கொஞ்சம் over”

“Ladies’கு helmet எல்லாம் ஒத்து வராது”

“Helmet பொட்டா வழக்கை விழும்”

“4 வயசுக்கு மேலே எல்லாருமே helmet போடனுமா! பெரியவங்கன்னா சொல்லி புரிய வைக்கலாம், கொழந்தைங்க போட மாட்டேன்னு அடம் பிடிச்சா என்ன பன்றது?”

இப்படி பல comment’களை ஊரிலும் கேட்டேன். சென்ற வாரம் ஆனந்த விகடனில் வெளியான ஒரு சிறுகதை ஞாபகத்துக்கு வந்தது. அந்த சிறுகதை கீழே


இந்த கதையில் வரும் குமாரசாமியை போல நாமும் ஆகாமல் இருக்க helmet அவசியமே. உண்மைத்தமிழன் அவரோட blog’ல சொல்றார்,
“தமிழ்நாட்டில் சென்ற ஐந்து வருட காலத்தில் நடந்த சாலை விபத்துக்களில் உயிரிழந்தோரில் தலையில் அடிபட்டு இறந்தவர்கள் 5 சதவிகிதத்தினருக்கும் குறைவுதான்.”
http://truetamilans.blogspot.com/2007/05/blog-post_29.html

இந்த statistics’ஓட source எனக்கு தெரியாது ஆனா helmet அணிவதால் இந்த 5 சதவிகிதத்தில் ஒரு 20 சதவிகிதம் பேரை காப்பாற்ற முடிந்தால் கூட சாலை விபத்துகளில் இறப்பவர்களில் ஒவ்வொரு வருடமும் 1 சதவிகிதம் பேரை காப்பாற்ற முடியுமே.

தமிழ்நாடு காவல்துறையின் கணக்குப்படி 2005’ம் ஆண்டு சாலை விபத்துக்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை – 10003. (source - http://www.tn.gov.in/policynotes/archives/policy2006-07/police_1.htm ) .

அதாவது Helmet அணிந்திருந்தால் குறைந்தபட்சம் ஏறத்தாழ ஒரு 100 பேரையாவது காப்பாற்றியிருக்கலாம். இந்த எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் கூடிக்கொண்டே போகிறது என்பது மேலும் கவலையளிக்கும் விஷயம்.

ஆக நாம் அனைவரும் helmet அணிவதன் மூலம் ஓராண்டுக்கு 100 உயிர்கள் காப்பாற்றப்படும் (Indirect புண்ணியம்னு நெனைச்சுக்குங்க). யார் கண்டார் அந்த 100 பேரில் நானோ நீங்களோ அல்லது நமக்கு மிக நெருக்கமான ஒருவர் கூட இருக்கலாம்!!!

Helmet அணிவது அசௌகரியம்னு யாராவது சொல்லப்போறாங்க ஏன்னா அப்படி பார்த்தா முதன் முதலில் ஆடை அணிந்த மனிதனுக்கு ஆடையே அசௌகரியமானதாகத்தான் இருந்திருக்கும். மானம் எனும் மனிதன் உருவாக்கிய perception’ஐ பாதுகாக்க ஆடை அணிகிறோம், ஆனால் இயற்கை பரிசளித்த மண்டையை பாதுகாக்க ஒரு ஆடை (Helmet) அணிய இவ்வளவு தயக்கம்.

“ஆமா!!! தமிழ்நாட்டுல இருக்கற 6.5 கோடிக்கும் மேற்பட்ட மக்கள்’ல எனக்கு மட்டும்தான் Accident ஆகப்போவுதா. அதுலயும் correct’ஆ எனக்குத்தான் மண்டைல அடிப்பட போகுதா”னு நெனைக்காதீங்க. புள்ளி ராஜாவுக்கு மட்டுமல்ல எந்த ராஜாவுக்கும் Accident நேரலாம்.

ஆக கூட்டிக் கழிச்சு பாத்தா “Helmet company’களின் சூழ்ச்சி” “Insuranceகாரர்களின் கடுப்பு” “லாப நோக்கு அரசியல்” என எந்தக் காரணமா இருந்தாலும் Helmet இருக்கறது நல்லதுனே தோனுது.

எல்லாம் சரி இந்த திட்டத்தை தேசிய அளவில் அமல்படுத்த வழி உண்டா? ஏன் கேட்கறேன்னா Set Top box, Helmet’னு எல்லா திட்டங்களும் தமிழ் நாட்டுலயே ஆரம்பிக்கறதுனாலே லேசா சந்தேகம் வருது!

பி.கு: Original helmet பார்த்து வாங்கறது எப்படி? கீழே பாருங்க
http://maraboorjc.blogspot.com/2007/02/blog-post.html