சிறப்பு வேளாண்மை மண்டலம்
சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்காக மாநில அரசாங்கங்கள் நிலங்களை ஆக்கிரமிப்பது பற்றி சூடான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கும் வேளையில் அதே வழியில் “சிறப்பு வேளாண்மை மன்டலங்கள்” அமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறார் திரு.சுவாமிநாதன் அவர்கள். The Hindu’வில் வெளியான செய்தியின் சுருக்கமும் URL’ம் கீழே உங்கள் பார்வைக்கு
Set up special farm zones a la SEZs: Swaminathan
Eminent agriculture scientist M.S. Swaminathan has advised the setting up of Special Agricultural Zones (SAZs) in the country on the lines of the much touted Special Economic Zones (SEZs) to achieve food security and food sovereignty through sustainable agriculture practices. As in the case of SEZs, special incentives and support must be given to farm families in SAZ areas so that a predominantly agricultural country like India can usher in a second Green Revolution, he said.
"Not a day should be lost in setting up Special Agricultural Zones both in irrigated and rain-fed areas to serve as flagships of India's ever-green revolution movement," Dr. Swaminathan, chairman of National Farmers' Commission, said
The guiding principles of SAZ were preservation of ecology, optimisation of economic and social benefits, equity, creation of additional jobs and energy conservation, he said. The concept would help to realise the untapped potential of rain-fed areas and ensure national nutrition security and food sovereignty, he observed.
SEZ and SAZ could become mutually complementary and not competitive, if the latter was aimed at bringing about a Small Farm Management Revolution improving the productivity, profitability and sustainability of the major farming systems in the country, he said. The country was in the early stages of a "land war" involving small and marginal farmers possessing fertile agriculture land and those who wish to purchase it for establishing industries or SEZ, he noted.
"Any Exit Policy for small farmers through land markets should be accompanied by an `Entry Policy' which will provide them with alternative and sustainable non-farm livelihoods. If this is not done, we will be swelling the numbers of landless labour families with disastrous social consequences," he cautioned. "Agriculture is the riskiest profession," he said.
For establishing SAZs, areas with high agricultural potential both under irrigated and rain-fed conditions could be identified. Integrated packages of technology, services, techno infrastructure and producer oriented trade could be introduced for these specialised areas with the help of farmers' organisations, gram sabhas and the private sector, he suggested. Common service centres could be introduced to provide centralised services for decentralised production, he said.
http://www.hindu.com/2007/04/24/stories/2007042401771300.htm
அரசாங்கம் என்றுமே விவசாயத்தின் மீது போதிய அக்கறையை காட்டுவதில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. கங்கை காவிரி இணைப்பு தொடங்கி இன்றைய SEZ வரை இதற்கு பல உதாரணங்கள் உண்டு. ஒரு வேளை அம்பானி, ரத்தன் டாடா போல விவசாயத்திற்கும் ஒரு strong’ஆன முகம் இல்லாமல் போனதுதான் காரணமோ? விவசாயமும் மற்றவற்றை போல ஒரு தொழில்தானே! பல லட்சக்கணக்கான விவசாயிகளின் முகமாக அல்லவா விவசாயம் விளங்குகிறது.
மேற்கு வங்கத்தில் அரசாங்கம் நடத்திய கொலைகளை பார்க்கும்போது “The country was in the early stages of a "land war” என்று இவர் குறிப்பிடுவது 100% உண்மை என்பது புரிகிறது. நிலமிழக்கும் ஒவ்வொரு விவசாயியும் அவனது குடும்பத்தோடு அகதியாக்கப்படுகிறான் என்பதை அரசாங்கம் உணர வேண்டும். இப்படி உள் நாட்டு அகதிகள் உருவாக்கப்படுவது பல கடுமையான சமுதாய விளைவுகளை ஏற்படுத்தும் என்கிற வாதம் நியாயமாகவே படுகிறது.
Agriculture is the riskiest profession என்பது மிகைப்படுத்தப்படாத உண்மை. அதனால்தான் இன்று நம்மில் யாரும் விவசாயத்தை சீந்தத்துணிவதில்லை. Software’ஐ விட நல்ல வருமானம் விவசாயத்தில் கிடைக்கும் நிலை இருந்திருந்தால் நம்மில் பலர் Agri அல்லது அது சம்பந்தப்பட்ட படிப்புகளை முடித்து விவசாயத்தில் இறங்கியிருப்போம் (அப்போது agri படிப்பதற்கு ஒரு seat’க்கு 10 லட்சம், 15 லட்சம் என்றாலும் donation கொடுத்து சேர்ந்திருப்போம்!!). இன்றைய நிலையில் விவசாயம் செய்ய யாருக்கு துணிவு இருக்கிறது? வேறு தொழில் செய்யத் தெரியாதவர்களே வேறு வழியின்றி இன்றும் விவசாயத்தை தொடர்கின்றனர்.
விவசாயத்தை விவசாயியே வெறுக்கும் நிலைக்கு கொண்டு வந்தாயிற்று. அதன் பலனே இன்றுஎந்த விவசாயியும் தன் குழந்தைகளுக்கு கூட விவசாயத்தை recommend செய்வதில்லை. விவசாயத்தில் உள்ள risk’களை குறைத்து வருமானத்தை பெருக்கினால் மட்டுமே இந்த தலைமுறையில் தொலைந்து போன ஆர்வத்தை அடுத்த தலைமுறையிலாவது மீட்டெடுக்க முடியும். அதற்கு SAZ போன்ற முயற்சிகள் நிச்சயம் கை கொடுக்கும்.
இன்னும் ஒரு சில வருடங்கள் கழித்து இந்த blog post’ஐ நான் படிக்கும்போது SAZ என்பது நம் எல்லோருக்கும் பழகிப்போன ஒரு வார்த்தையாகி இந்த post’ஏ ஒரு interest இல்லாத விஷயமாகிப்போனால் நல்லது. மாறாக இதுவும் கங்கை-காவிரி இணைப்பு போல ஒரு கனவுத்திட்டமாக எண்ணி ஏங்கிக் கொண்டிருந்தால்….
வேண்டாம்! நினைக்கவே பயமாயிருக்கிறது!!!
2 comments:
"சிறப்பு வேளாண்மை மண்டலம்" என்ற நல்ல பதிவோடு அறிமுகமாகி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
விவசாயத்தை திட்டமிட்டே இந்திய அரசு அழித்துவருகிறது. 1994 லிருந்து தனியார்மயம், தாரளமயம், உலகமயம் - என்ற கொள்கைகள் அமுலாகிவருகிறது.
அதன் தொடர்ச்சிதான் SEZ, மற்றும் விவசாயிகள் உள்ளுரிலேயே அகதியாக்கப்படுதலும்.
இன்றைக்கு நாடு முழுவதும் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார்கள். இதை இந்திய அரசும் ஒத்துக்கொள்கிறது.
SEZ-ன் ஒழிப்பில் தான், SAZ சாத்தியப்பாடு இருக்கிறது.
M.S. சுவாமிநாதன் - SAZ- இதை வழிமொழிகிறார் இன்றைக்கு. இதே சுவாமிநாதன் தான், பசுமை புரட்சி என்கிற பேரில் மரபு வழி விவசாயத்தை மறுத்து, இந்தியா பூச்சிமருந்துகளை வளர்ந்த நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு ஆதரவு அளித்தார்.
அதன் தொடர்ச்சியில், அது விளைவித்த பாதிப்பு எத்தனை விவசாயிகளை, விவசாயத்திலிருந்தே விரட்டியது என நாடே அறியும்.
இன்றைக்கு மீண்டும், இதே சுவாமிநாதன் மரபுவழி விவசாயம் சரி என்கிறாராம். கொடுமை. இவர்களை என்ன செய்வது?
தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி Maha. முகம் தெரியாத நண்பரிடமிருந்து வரும் முதல் comment இதுதான்.
இதே சுவாமிநாதன் தான், பசுமை புரட்சி என்கிற பேரில் மரபு வழி விவசாயத்தை மறுத்து, இந்தியா பூச்சிமருந்துகளை வளர்ந்த நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு ஆதரவு அளித்தார்.
இந்த விஷயத்தில்எனக்கு past history’ஐ பற்றிய அறிவு குறைவுதான். ஆனால் நீங்கள் கூறியதில் ஒன்று புரிகிறது அன்று பூச்சிகளை அழிக்க முயன்று விவசாயத்தை அழித்தார்கள். ஆனால் இன்று விவசாயத்தை அழிக்க விவசாயிகளை (விட்டில்) பூச்சிகளாக மாற்ற முயல்கின்றனர்.
SEZ’க்கான ஆக்கிரமிப்புக்கு கொடுக்கப்படும் ஒரு சில லட்சங்கள் தங்களை விழுங்கத் துடிக்கும் மாய விளக்குகள் என்பதை உணர்ந்ததாலேயே இவ்வளவு போராட்டங்கள்.
சில லட்சங்களை கொடுப்பதை விட இந்த மக்களின் லட்சியங்களுக்கு சற்றே மதிப்பு கொடுத்தால் அனைவரும் மகிழ்ச்சி அடைவர்.
Post a Comment