செய்தி
யாரையும் விமர்சிக்காமத்தான் blog எழுதனும்னு முடிவா இருந்தேன்....
ஆனா… முடியல…
முதலில் இன்றைய web செய்தி...
http://thatstamil.oneindia.in/news/2007/05/09/alagiri.html
மே 09, 2007 மதுரை: முதல்வர் கருணாநிதியின் அரசியல் வாரிசாக இளைய மகனும் அமைச்சருமான ஸ்டாலினுக்கே மக்களிடம் ஆதரவு இருப்பதாகவும் மூத்த மகன் மு.க.அழகிரிக்கு சுத்தமாக மக்கள் ஆதரவு இல்லை என்றும் கருத்துக் கணிப்பு வெளியிட்ட தினகரன் பத்திரிக்கை அலுவகம் மீதும், சன் டிவி அலுவலகம் மீதும் மதுரையில் அழகிரியின் ஆதரவாளர்கள் இன்று மிக பயங்கர தாக்குதல் நடத்தினர்.
அரிவாள்கள், கத்திகள், உருட்டுக் கட்டைகளுடன் தாக்குதலில் இறங்கிய அவர்கள் சன் டிவி அலுவலகத்தை தாக்கி சூறையாடி பெட்ரோல் குண்டையும் வீசினர். இதில் மூன்று ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தக் கும்பல் நடத்திய தாக்குதலில் மேலும் பலர் மயக்கமடைந்தனர்.
தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களிலேயே யார் சிறந்தவர் என்று நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் தயாநிதி மாறன்தான் நம்பர் ஒன் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸின் மகனும், சுகாதாரத் துறை அமைச்சருமான அன்புமணிக்கு 2 சதவீத ஆதரவே உள்ளதாக தெரிவிக்கப்பட்டதால் பாமகவினர் கொந்தளித்துள்ளனர்.
இந்த நிலையில், இன்று வெளியான கருத்துக் கணிப்பில் கருணாநிதியின் அரசியல் வாரிசு யார் என்ற கேள்விக்கு மு.க.ஸ்டாலினுக்கே அதிக ஆதரவு உள்ளதாகவும், ஸ்டாலினின் கடும் போட்டியாளராக கருதப்படும் அழகிரிக்கு 2 சதவீத ஆதரவே உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த செய்தியைப் படித்ததும் மதுரையில் இன்று அழகிரி ஆதரவாளர்கள் கொந்தளித்தனர். சாலை மறியலிலும் அவர்கள் திடீரென குதித்தனர். அந்த வழியாக வந்த பேருந்துகள் மீது கல்வீசித் தாக்கப்பட்டது. 7 பஸ்களையும் தீ வைத்து எரித்தனர். போராட்டம் நடந்த பகுதிகளில் பரபரப்பு நிலவியது. வன்முறையின் உச்ச கட்டமாக மதுரை உத்தங்குடியில் உள்ள சன் டிவி அலுவலகம், தினகரன் அலுவலகம் (அனைத்தும் ஒரே இடத்தில் உள்ளன) மீது ஒரு கும்பல் புகுந்து தாக்கியது. இதில் அலுவலகத்தின் மீது சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதில் கோபி மற்றும் வினோத் ஆகிய இரு ஊழியர்கள் உள்பட பல ஊழியர்கள் சிக்கிக் கொண்டனர்.இவர்களில் கோபி (28) சம்பவ இடத்திலேயே பலியானார். வினோத் (27) மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். அதேபோல, சன் டிவி நிறுவன காவலாளி முத்துராமலிங்கம் என்பவரும் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். பெட்ரோல் குண்டு வீச்சில் ஏற்பட்ட புகையால் மூச்சுத் திணறி அவர் பலியாகியுள்ளார். அவர் இறந்தது முதலில் தெரியவில்லை. தீயணைப்புப் படையினர் வந்து தீயை அணைத்தபோது தான் கரிக்கட்டையாக எரிந்த நிலையில் அவரது உடல் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
வன்முறையில் இறங்கிய மேயர்: மேலும் அழகிரியின் தீவிர ஆதரவாளரான மதுரை மேயர் தேன்மொழி, தினகரன் நாளிதழ்களை தனது ஆதரவாளர்களோடு சேர்ந்து எரித்து போராட்டம் நடத்தினார். கலட்டாவிலும் ஈடுபட்டார்.
செல்வி.ஜெயலலிதா “கலைஞரின் குடும்பத் தொலைகாட்சி, கலைஞரின் குடும்பப் பத்திரிகை” என்று அர்ச்சனை செய்யும்போதெல்லாம் கொஞ்சம் ஓவரா பேசுகிறாரோ என நினைத்ததுண்டு. ஆனால் மேலே உள்ள செய்தியை படித்தால் அவர்களது குடும்ப பிரச்சனையாகவே தோன்றுகிறது. இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணம் செல்வி.ஜெயலலிதா அடிக்கடி குறிப்பிடும் அந்த குடும்பத் தொலைகாட்சியும், பத்திரிகையும்தான்.
இன்று தங்களின் குடும்ப அரசியல் சண்டையின் சூட்டை குறைத்துக் கொள்ள அவர்கள் குடித்திருப்பது மூன்று உயிர்கள்!!! (நாளை காலைக்குள் இந்த எண்ணிக்கை உயராமல் இருந்தால் நல்லது).
தங்களுடைய குடும்பப் பிரச்சனையை தங்களுக்குள் தீர்த்துக் கொள்ள முடியாதவர்களெல்லாம் அரசியலில் இருந்து கொண்டு எப்படி மக்களின் பிரச்சனையை தீர்த்து வைக்கப் போகிறார்களோ???!!!
பொன்விழா காணும் கலைஞர் தன் குடும்பத்திடமிருந்து இதை விட பெரிய பரிசை எதிர்பார்த்திருக்க முடியாது.
வாழ்க கலைஞர்!!!
வாழ்க குடும்ப அரசியல்!!!
ஒழிக அப்பாவி மக்கள்!!!
No comments:
Post a Comment