Wednesday 30 May, 2007

Sampling technique

கரூரிலிருந்து ஈரோட்டிற்கு இரயில் பயணம். இரயில் கொடுமுடியை தாண்டி சென்று கொண்டிருந்தது. சுமார் 10 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் ஒரு கூடை நிறைய வறுத்த கடலைகளுடன் வந்தான். வந்தவன் அமர்ந்திருந்த அனைவரின் கைகளிலும் சிறிதளவு கொடுத்து விட்டு சென்றான். இலவசமாக கிடைத்ததால் அனைவரும் கிடைத்தை வாயில் போட்டு மெல்ல ஆரம்பித்தனர். பதினைந்து நிமிடம் கழித்து மீண்டும் வந்தான், ஆனால் இப்போது ஒரு குவளை மூன்று ரூபாய் என சொல்லி வியாபாரத்தை ஆரம்பித்தான். அசைபோட்டுக்கொண்டிருந்த வாய்களுக்கு அடக்கத்தெரியவில்லை. அனைவரும் ஆர்வத்துடன் வாங்க, அவனது வியாபாரமும் வேகமாக நடந்தது.

எத்தனையோ பெரிய பெரிய நிறுவனங்கள் consumer’களை கவர sampling technique’ஐ உபயோகப்படுத்துவதை பார்த்திருக்கிறேன். ஆனால் அதே வித்தையை தன்னுடைய சிறிய வியாபாரத்திற்கும் பயன்படுத்த முடியும் என்று நிரூபித்த இந்த சிறுவன் சட்டென மனதில் பதிந்தான்.

இந்த சம்பவத்தில் இரண்டு விஷயங்கள் புரிந்தது,

1. Sales and Marketing என்பது ஏதோ பெரிய பன்னாட்டு நிறுவனங்களுக்கு மட்டும் சொந்தமான வார்த்தையல்ல. திறமையும் அறிவும் இருந்தால் அவற்றை சில்லரை வணிகத்துக்குக் கூட பயன்படுத்தலாம்.

2. மயக்க Biscuit, மயக்க chocolate என நாள்தோறும் எத்தனை செய்திகள் வந்தாலும் நம் மக்களை திருத்த முடியாது.

பி.கு: இந்தியாவில் ஐந்து முதல் பதினான்கு வயதிற்குட்பட்ட குழந்தைத்தொழிலார்கள் (1999-2003) --> 14%

Thursday 24 May, 2007

சமீபத்தில் ரசித்த cartoon

Team Work

Monday 21 May, 2007

இளங்கன்று பயமறியாது!!!!!



இளங்கன்று பயமறியாது சரி!!!
இந்த குழந்தையை பெற்றவர்களுக்கு கூடவா பயம் கிடையாது???!!!

Wednesday 16 May, 2007

தொலைந்து போன பொறுமை

ஒரு சில மாதங்களுக்கு முன்னால் விடுமுறையில் ஊருக்கு சென்றிருந்தேன். இரண்டரை வயதான என் உறவுக்கார தங்கை வீட்டுக்கு வந்திருந்தாள். சில சமயம் உறவுகளில் இது போன்ற குழப்பங்கள் நிகழ்வதுண்டு. என்னை விட வயதில் சிறியவன் எனக்கு மாமா முறை ஆனதெல்லாம் உண்டு. நல்லவேளையாக அவனை மாமா என்று அழைக்க வேண்டும் என யாரும் வற்புறுத்தவில்லை. சரி விஷயத்திற்கு வருவோம்.

வீட்டில் இருந்தவள் ஏதோ விளையாண்டு கொண்டிருக்க நான் என் mobile’ல் sudoku விளையாண்டுக் கொண்டிருந்தேன். சற்று நேரம் என்னை உற்று நோக்கியவள் மழலைக்குரலில் “அண்ணா என்ன பன்றீங்க” என்றாள். “Game வெளையாண்டுக்கிட்டுருக்கேன் பாப்பா” என்றேன். சரியென தலையசைத்து விட்டு மீண்டும் விளையாட சென்று விட்டாள்.

ஒரு ஐந்து நிமிடம் ஆகியிருக்கும் என்னிடம் திரும்ப வந்தாள். என்னைப் பார்த்து மீண்டும் “அண்ணா என்ன பன்றீங்க”என்றாள். நானும் மீண்டும் “Game வெளையாண்டுக்கிட்டுருக்கேன்” என்றேன். சரியென சென்றவள் மீண்டும் ஐந்து நிமிடத்துக்குள்ளாகவே வந்தாள். வந்தவள் மீண்டும் “அண்ணா என்ன பன்றீங்க” என்றாள். “Game வெளையாண்டுக்கிட்டுருக்கேன்னு சொல்றேன்ல” என்றேன் எரிச்சலுடன். தலையசைத்துவிட்டு சென்று விட்டாள்.

அவள் கஜினி முகமதுவின் பரம்பரையாக இருக்க வேண்டும். அடுத்த ஐந்து நிமிடத்துக்குள்ளாகவே மீண்டும் வந்து அதே கேள்வியை திரும்ப கேட்டாள். அவ்வளவுதான் அதற்கு மேல் என்னால் பொறுமையாக இருக்க முடியவில்லை “சொல்ல முடியாது...பே…” என்றேன். அவள் முகம் சட்டென மாறி விட்டது. ஏதும் சொல்லாமல் சென்று விட்டாள்.

இதை கவணித்துக் கொண்டிருந்த என் அம்மா “நீ கொழந்தையா இருந்தப்ப இந்த மாதிரி எத்தனை தடவை கேட்டிருக்க தெரியுமா?”என்றார். சட்டென ஏதோ உறைத்த மாதிரி இருந்தது.

அந்த இரண்டரை வயது பிஞ்சுக்கு கேள்வி கேட்பதில் இருந்த பொறுமையில் பாதி கூட பதில் சொல்வதில் எனக்கு இல்லை. நானும் சிறு வயதில் அவளைப் போல பொறுமையாகத்தான் இருந்திருக்கிறேன். வளர்ச்சியின் வேகத்தில்தான் எங்கோ அதைத் தொலைத்து விட்டேன்.

மீண்டும் வந்து அவள் வந்து அதே கேள்வியை கேட்டால் பொறுமையாக பதிலளிக்க வேண்டும் என முடிவு செய்து காத்திருந்தேன். ஆனால் அவள் திரும்ப வரவே இல்லை. ஒருவேளை என்னுடைய செய்கையால் அவள் கேள்வி கேட்கும் பொறுமையை தொலைத்து விட்டிருப்பாளோ???

Wednesday 9 May, 2007

செய்தி

யாரையும் விமர்சிக்காமத்தான் blog எழுதனும்னு முடிவா இருந்தேன்....
ஆனா… முடியல…
முதலில் இன்றைய web செய்தி...

http://thatstamil.oneindia.in/news/2007/05/09/alagiri.html

மே 09, 2007 மதுரை: முதல்வர் கருணாநிதியின் அரசியல் வாரிசாக இளைய மகனும் அமைச்சருமான ஸ்டாலினுக்கே மக்களிடம் ஆதரவு இருப்பதாகவும் மூத்த மகன் மு.க.அழகிரிக்கு சுத்தமாக மக்கள் ஆதரவு இல்லை என்றும் கருத்துக் கணிப்பு வெளியிட்ட தினகரன் பத்திரிக்கை அலுவகம் மீதும், சன் டிவி அலுவலகம் மீதும் மதுரையில் அழகிரியின் ஆதரவாளர்கள் இன்று மிக பயங்கர தாக்குதல் நடத்தினர்.

அரிவாள்கள், கத்திகள், உருட்டுக் கட்டைகளுடன் தாக்குதலில் இறங்கிய அவர்கள் சன் டிவி அலுவலகத்தை தாக்கி சூறையாடி பெட்ரோல் குண்டையும் வீசினர். இதில் மூன்று ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தக் கும்பல் நடத்திய தாக்குதலில் மேலும் பலர் மயக்கமடைந்தனர்.

தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களிலேயே யார் சிறந்தவர் என்று நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் தயாநிதி மாறன்தான் நம்பர் ஒன் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸின் மகனும், சுகாதாரத் துறை அமைச்சருமான அன்புமணிக்கு 2 சதவீத ஆதரவே உள்ளதாக தெரிவிக்கப்பட்டதால் பாமகவினர் கொந்தளித்துள்ளனர்.

இந்த நிலையில், இன்று வெளியான கருத்துக் கணிப்பில் கருணாநிதியின் அரசியல் வாரிசு யார் என்ற கேள்விக்கு மு.க.ஸ்டாலினுக்கே அதிக ஆதரவு உள்ளதாகவும், ஸ்டாலினின் கடும் போட்டியாளராக கருதப்படும் அழகிரிக்கு 2 சதவீத ஆதரவே உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த செய்தியைப் படித்ததும் மதுரையில் இன்று அழகிரி ஆதரவாளர்கள் கொந்தளித்தனர். சாலை மறியலிலும் அவர்கள் திடீரென குதித்தனர். அந்த வழியாக வந்த பேருந்துகள் மீது கல்வீசித் தாக்கப்பட்டது. 7 பஸ்களையும் தீ வைத்து எரித்தனர். போராட்டம் நடந்த பகுதிகளில் பரபரப்பு நிலவியது. வன்முறையின் உச்ச கட்டமாக மதுரை உத்தங்குடியில் உள்ள சன் டிவி அலுவலகம், தினகரன் அலுவலகம் (அனைத்தும் ஒரே இடத்தில் உள்ளன) மீது ஒரு கும்பல் புகுந்து தாக்கியது. இதில் அலுவலகத்தின் மீது சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதில் கோபி மற்றும் வினோத் ஆகிய இரு ஊழியர்கள் உள்பட பல ஊழியர்கள் சிக்கிக் கொண்டனர்.இவர்களில் கோபி (28) சம்பவ இடத்திலேயே பலியானார். வினோத் (27) மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். அதேபோல, சன் டிவி நிறுவன காவலாளி முத்துராமலிங்கம் என்பவரும் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். பெட்ரோல் குண்டு வீச்சில் ஏற்பட்ட புகையால் மூச்சுத் திணறி அவர் பலியாகியுள்ளார். அவர் இறந்தது முதலில் தெரியவில்லை. தீயணைப்புப் படையினர் வந்து தீயை அணைத்தபோது தான் கரிக்கட்டையாக எரிந்த நிலையில் அவரது உடல் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

வன்முறையில் இறங்கிய மேயர்: மேலும் அழகிரியின் தீவிர ஆதரவாளரான மதுரை மேயர் தேன்மொழி, தினகரன் நாளிதழ்களை தனது ஆதரவாளர்களோடு சேர்ந்து எரித்து போராட்டம் நடத்தினார். கலட்டாவிலும் ஈடுபட்டார்.



செல்வி.ஜெயலலிதா “கலைஞரின் குடும்பத் தொலைகாட்சி, கலைஞரின் குடும்பப் பத்திரிகை” என்று அர்ச்சனை செய்யும்போதெல்லாம் கொஞ்சம் ஓவரா பேசுகிறாரோ என நினைத்ததுண்டு. ஆனால் மேலே உள்ள செய்தியை படித்தால் அவர்களது குடும்ப பிரச்சனையாகவே தோன்றுகிறது. இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணம் செல்வி.ஜெயலலிதா அடிக்கடி குறிப்பிடும் அந்த குடும்பத் தொலைகாட்சியும், பத்திரிகையும்தான்.

இன்று தங்களின் குடும்ப அரசியல் சண்டையின் சூட்டை குறைத்துக் கொள்ள அவர்கள் குடித்திருப்பது மூன்று உயிர்கள்!!! (நாளை காலைக்குள் இந்த எண்ணிக்கை உயராமல் இருந்தால் நல்லது).

தங்களுடைய குடும்பப் பிரச்சனையை தங்களுக்குள் தீர்த்துக் கொள்ள முடியாதவர்களெல்லாம் அரசியலில் இருந்து கொண்டு எப்படி மக்களின் பிரச்சனையை தீர்த்து வைக்கப் போகிறார்களோ???!!!

பொன்விழா காணும் கலைஞர் தன் குடும்பத்திடமிருந்து இதை விட பெரிய பரிசை எதிர்பார்த்திருக்க முடியாது.

வாழ்க கலைஞர்!!!
வாழ்க குடும்ப அரசியல்!!!
ஒழிக அப்பாவி மக்கள்!!!

Tuesday 8 May, 2007

செய்தி

“நான் சின்னப் புள்ளயா இருந்தப்ப வரப்புத் தகராறுக்கெல்லாம் கூட வெட்டிக்குவாங்க” என்றுஎன் அம்மா சொன்னபோது “இதுக்கெல்லாம் போய் சண்டை போடுவார்களா!!!” என்று யோசித்திருக்கிறேன். வெட்டிக்கொள்வதே வீரம் என்ற மனப்பான்மையுடன் வாழ்ந்ததாலேயே சின்னச்சின்ன விஷயங்களுக்குக் கூட வெட்டு, குத்து என வன்முறையில் இறங்கினர் அன்றைய மக்கள் என்ற எண்ணத்தில் இருந்தேன். கருப்பண்ண சாமியின் (ஊர் காவல் தெய்வம்) கையில் இருக்கும் அரிவாளைப் பார்த்த போது இது அன்றைய மக்களின் மன நிலையை பிரதிபலிக்கும் “symbolic representation” என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் கீழே உள்ள செய்திகளைப் படித்தபோது வரப்புத் தகராறெல்லாம் மிக மிக நியாயமான தகராறாகவே தோன்றியது!!!




பெங்களூரில் (பெங்களூருவில்’னு சொல்லனுமா??) வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது படித்த செய்தி இது. நீண்ட நாட்கள் கழித்து இந்த சம்பவத்தைப் பற்றி எதேச்சையாக பேசிக்கொண்டிருக்கையில் நண்பன் ஒருவன் சொன்ன இன்னொரு செய்தி கீழே


மேலே உள்ள இரண்டு செய்திகளையும் படித்தால் என்னால் பெருமூச்சு விட மட்டுமே முடிகிறது.

“மண், பெண், பொன்” – சில காலம் முன் வரை இவற்றை வெல்லத்தான் சண்டையே. ஆனால் நாம் எப்போது பொங்கல், பாயாசத்திற்கு எல்லாம் சண்டை போட ஆரம்பித்தோம் என்று தெரியவில்லை.

திருமணம் – ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மிக முக்கியமான, மிக சந்தோஷமான தருணம்.
திருமண நாள் – இணையும் இருவருக்கும் அது இன்னொரு பிறந்த நாள்.

எண்ணற்ற ஆசைகளுடனும், கனவுகளுடனும் ஆரம்பிக்கும் திருமண வாழ்க்கை, இந்த செய்திகளில் சம்பந்தப்பட்ட ஜோடிகளுக்கு இப்படி ஆரம்பித்தது துரதிர்ஷ்டவசமானதே.

இவர்களுக்கும் மற்றவர்களைப் போல அவர்களது திருமண நாள் மறக்க முடியாத நாள்தான்...
ஆனால் வேறு வகையில்…

Friday 4 May, 2007

சிறப்பு வேளாண்மை மண்டலம்

சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்காக மாநில அரசாங்கங்கள் நிலங்களை ஆக்கிரமிப்பது பற்றி சூடான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கும் வேளையில் அதே வழியில் “சிறப்பு வேளாண்மை மன்டலங்கள்” அமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறார் திரு.சுவாமிநாதன் அவர்கள். The Hindu’வில் வெளியான செய்தியின் சுருக்கமும் URL’ம் கீழே உங்கள் பார்வைக்கு

Set up special farm zones a la SEZs: Swaminathan

Eminent agriculture scientist M.S. Swaminathan has advised the setting up of Special Agricultural Zones (SAZs) in the country on the lines of the much touted Special Economic Zones (SEZs) to achieve food security and food sovereignty through sustainable agriculture practices. As in the case of SEZs, special incentives and support must be given to farm families in SAZ areas so that a predominantly agricultural country like India can usher in a second Green Revolution, he said.

"Not a day should be lost in setting up Special Agricultural Zones both in irrigated and rain-fed areas to serve as flagships of India's ever-green revolution movement," Dr. Swaminathan, chairman of National Farmers' Commission, said

The guiding principles of SAZ were preservation of ecology, optimisation of economic and social benefits, equity, creation of additional jobs and energy conservation, he said. The concept would help to realise the untapped potential of rain-fed areas and ensure national nutrition security and food sovereignty, he observed.

SEZ and SAZ could become mutually complementary and not competitive, if the latter was aimed at bringing about a Small Farm Management Revolution improving the productivity, profitability and sustainability of the major farming systems in the country, he said. The country was in the early stages of a "land war" involving small and marginal farmers possessing fertile agriculture land and those who wish to purchase it for establishing industries or SEZ, he noted.

"Any Exit Policy for small farmers through land markets should be accompanied by an `Entry Policy' which will provide them with alternative and sustainable non-farm livelihoods. If this is not done, we will be swelling the numbers of landless labour families with disastrous social consequences," he cautioned. "Agriculture is the riskiest profession," he said.

For establishing SAZs, areas with high agricultural potential both under irrigated and rain-fed conditions could be identified. Integrated packages of technology, services, techno infrastructure and producer oriented trade could be introduced for these specialised areas with the help of farmers' organisations, gram sabhas and the private sector, he suggested. Common service centres could be introduced to provide centralised services for decentralised production, he said.

http://www.hindu.com/2007/04/24/stories/2007042401771300.htm

அரசாங்கம் என்றுமே விவசாயத்தின் மீது போதிய அக்கறையை காட்டுவதில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. கங்கை காவிரி இணைப்பு தொடங்கி இன்றைய SEZ வரை இதற்கு பல உதாரணங்கள் உண்டு. ஒரு வேளை அம்பானி, ரத்தன் டாடா போல விவசாயத்திற்கும் ஒரு strong’ஆன முகம் இல்லாமல் போனதுதான் காரணமோ? விவசாயமும் மற்றவற்றை போல ஒரு தொழில்தானே! பல லட்சக்கணக்கான விவசாயிகளின் முகமாக அல்லவா விவசாயம் விளங்குகிறது.

மேற்கு வங்கத்தில் அரசாங்கம் நடத்திய கொலைகளை பார்க்கும்போது “The country was in the early stages of a "land war” என்று இவர் குறிப்பிடுவது 100% உண்மை என்பது புரிகிறது. நிலமிழக்கும் ஒவ்வொரு விவசாயியும் அவனது குடும்பத்தோடு அகதியாக்கப்படுகிறான் என்பதை அரசாங்கம் உணர வேண்டும். இப்படி உள் நாட்டு அகதிகள் உருவாக்கப்படுவது பல கடுமையான சமுதாய விளைவுகளை ஏற்படுத்தும் என்கிற வாதம் நியாயமாகவே படுகிறது.

Agriculture is the riskiest profession என்பது மிகைப்படுத்தப்படாத உண்மை. அதனால்தான் இன்று நம்மில் யாரும் விவசாயத்தை சீந்தத்துணிவதில்லை. Software’ஐ விட நல்ல வருமானம் விவசாயத்தில் கிடைக்கும் நிலை இருந்திருந்தால் நம்மில் பலர் Agri அல்லது அது சம்பந்தப்பட்ட படிப்புகளை முடித்து விவசாயத்தில் இறங்கியிருப்போம் (அப்போது agri படிப்பதற்கு ஒரு seat’க்கு 10 லட்சம், 15 லட்சம் என்றாலும் donation கொடுத்து சேர்ந்திருப்போம்!!). இன்றைய நிலையில் விவசாயம் செய்ய யாருக்கு துணிவு இருக்கிறது? வேறு தொழில் செய்யத் தெரியாதவர்களே வேறு வழியின்றி இன்றும் விவசாயத்தை தொடர்கின்றனர்.

விவசாயத்தை விவசாயியே வெறுக்கும் நிலைக்கு கொண்டு வந்தாயிற்று. அதன் பலனே இன்றுஎந்த விவசாயியும் தன் குழந்தைகளுக்கு கூட விவசாயத்தை recommend செய்வதில்லை. விவசாயத்தில் உள்ள risk’களை குறைத்து வருமானத்தை பெருக்கினால் மட்டுமே இந்த தலைமுறையில் தொலைந்து போன ஆர்வத்தை அடுத்த தலைமுறையிலாவது மீட்டெடுக்க முடியும். அதற்கு SAZ போன்ற முயற்சிகள் நிச்சயம் கை கொடுக்கும்.

இன்னும் ஒரு சில வருடங்கள் கழித்து இந்த blog post’ஐ நான் படிக்கும்போது SAZ என்பது நம் எல்லோருக்கும் பழகிப்போன ஒரு வார்த்தையாகி இந்த post’ஏ ஒரு interest இல்லாத விஷயமாகிப்போனால் நல்லது. மாறாக இதுவும் கங்கை-காவிரி இணைப்பு போல ஒரு கனவுத்திட்டமாக எண்ணி ஏங்கிக் கொண்டிருந்தால்….
வேண்டாம்! நினைக்கவே பயமாயிருக்கிறது!!!

Wednesday 2 May, 2007

மரமண்டை


மரமண்டை’னா இதானா???

Tuesday 1 May, 2007

கிராமத்து திருவிழா

திருவிழா என்றால் அது கிராமங்களில்தான். அதற்கு முக்கிய காரணம் அனைவரும் ஒற்றுமையாய் அதை முன்னின்று நடத்தும் விதம். சமீபத்தில் அப்படி ஒரு திருவிழாவிற்கு செல்ல நேர்ந்தது. கீழ்கானும் புகைப்படங்கள் அங்கே click’ செய்தவை.


குதிரை சவாரிக்கு colorful வண்டி ready


சவாரிக்கு குதிரையும் ready


குதிரை சவாரிதாங்க ஆனா ஒரு சின்ன வித்தியாசம் இங்க குதிரை மாட்டு வண்டி மேல சவாரி செய்யுது :-)

எங்கள் ஊருக்கு அருகில் உள்ள மற்றொரு கிராமத்தில் நடந்த திருவிழா இது. மொத்தம் இருபத்தி இரண்டு மண் குதிரைகள் நேர்த்திக்கடனாக செலுத்தப்பட்டன. ஒவ்வொரு குதிரைக்கும் ஒவ்வொரு கிடா வீதம் மொத்தம் இருபத்தி இரண்டு கிடா வெட்டி வழிபட்டனர் (நான் செல்வதற்குள் கிடா வெட்டு முடிந்து விட்டது அதனால் அந்த mass killing’ஐ capture செய்ய முடியவில்லை). பின்னர் ஒவ்வொரு குதிரையும் ஆளுக்கொரு மாட்டு வண்டியில் ஏறி (அதாவது ஏற்றப்பட்டு) ஊர்வலமாய் கோயிலை சென்றடைந்தன. மேலும் சில படங்கள் கீழே


மண் மாடு (மண் மனிதன் கூட உன்டு)



குதிரை sideview



வேம்பு (வேப்பிலை) இல்லாத திருவிழாவா!!!



ஒன்றிணைந்த செயல்பாடு



சிற்றுந்து – கிராமத்து ஜெட்

உபரி செய்தி:
ஒரு மண் குதிரையின் விலை --> ஆறாயிரம் ரூபாய்.
ஒரு மண் மாட்டின் விலை --> நூறு ரூபாய்.