Tuesday, 8 May 2007

செய்தி

“நான் சின்னப் புள்ளயா இருந்தப்ப வரப்புத் தகராறுக்கெல்லாம் கூட வெட்டிக்குவாங்க” என்றுஎன் அம்மா சொன்னபோது “இதுக்கெல்லாம் போய் சண்டை போடுவார்களா!!!” என்று யோசித்திருக்கிறேன். வெட்டிக்கொள்வதே வீரம் என்ற மனப்பான்மையுடன் வாழ்ந்ததாலேயே சின்னச்சின்ன விஷயங்களுக்குக் கூட வெட்டு, குத்து என வன்முறையில் இறங்கினர் அன்றைய மக்கள் என்ற எண்ணத்தில் இருந்தேன். கருப்பண்ண சாமியின் (ஊர் காவல் தெய்வம்) கையில் இருக்கும் அரிவாளைப் பார்த்த போது இது அன்றைய மக்களின் மன நிலையை பிரதிபலிக்கும் “symbolic representation” என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் கீழே உள்ள செய்திகளைப் படித்தபோது வரப்புத் தகராறெல்லாம் மிக மிக நியாயமான தகராறாகவே தோன்றியது!!!




பெங்களூரில் (பெங்களூருவில்’னு சொல்லனுமா??) வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது படித்த செய்தி இது. நீண்ட நாட்கள் கழித்து இந்த சம்பவத்தைப் பற்றி எதேச்சையாக பேசிக்கொண்டிருக்கையில் நண்பன் ஒருவன் சொன்ன இன்னொரு செய்தி கீழே


மேலே உள்ள இரண்டு செய்திகளையும் படித்தால் என்னால் பெருமூச்சு விட மட்டுமே முடிகிறது.

“மண், பெண், பொன்” – சில காலம் முன் வரை இவற்றை வெல்லத்தான் சண்டையே. ஆனால் நாம் எப்போது பொங்கல், பாயாசத்திற்கு எல்லாம் சண்டை போட ஆரம்பித்தோம் என்று தெரியவில்லை.

திருமணம் – ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மிக முக்கியமான, மிக சந்தோஷமான தருணம்.
திருமண நாள் – இணையும் இருவருக்கும் அது இன்னொரு பிறந்த நாள்.

எண்ணற்ற ஆசைகளுடனும், கனவுகளுடனும் ஆரம்பிக்கும் திருமண வாழ்க்கை, இந்த செய்திகளில் சம்பந்தப்பட்ட ஜோடிகளுக்கு இப்படி ஆரம்பித்தது துரதிர்ஷ்டவசமானதே.

இவர்களுக்கும் மற்றவர்களைப் போல அவர்களது திருமண நாள் மறக்க முடியாத நாள்தான்...
ஆனால் வேறு வகையில்…

1 comment:

அமிர்தா said...

கோழிக்கால் உடைந்து போனதற்காக பக்கத்து வீட்டுக்காரனுடன் சண்டை. கொழம்பு கெட்டுப்போனதற்காக பெரிய வருத்தம்.

இப்படி சின்ன சின்ன விசயங்களுக்காக மக்கள் இப்படி நடந்து கொள்கிறார்களே என இரண்டு, மூன்றுமுறை தற்கொலைக்கு முயன்று தோற்றுப்போனேன்.

பிறகு, அறியாமையால்தான் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்ற உண்மை அறிந்தேன்.

- மார்க்சிம் கார்க்கி - ருசியாவின் மாபெரும் எழுத்தாளர்.