Wednesday, 30 May 2007

Sampling technique

கரூரிலிருந்து ஈரோட்டிற்கு இரயில் பயணம். இரயில் கொடுமுடியை தாண்டி சென்று கொண்டிருந்தது. சுமார் 10 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் ஒரு கூடை நிறைய வறுத்த கடலைகளுடன் வந்தான். வந்தவன் அமர்ந்திருந்த அனைவரின் கைகளிலும் சிறிதளவு கொடுத்து விட்டு சென்றான். இலவசமாக கிடைத்ததால் அனைவரும் கிடைத்தை வாயில் போட்டு மெல்ல ஆரம்பித்தனர். பதினைந்து நிமிடம் கழித்து மீண்டும் வந்தான், ஆனால் இப்போது ஒரு குவளை மூன்று ரூபாய் என சொல்லி வியாபாரத்தை ஆரம்பித்தான். அசைபோட்டுக்கொண்டிருந்த வாய்களுக்கு அடக்கத்தெரியவில்லை. அனைவரும் ஆர்வத்துடன் வாங்க, அவனது வியாபாரமும் வேகமாக நடந்தது.

எத்தனையோ பெரிய பெரிய நிறுவனங்கள் consumer’களை கவர sampling technique’ஐ உபயோகப்படுத்துவதை பார்த்திருக்கிறேன். ஆனால் அதே வித்தையை தன்னுடைய சிறிய வியாபாரத்திற்கும் பயன்படுத்த முடியும் என்று நிரூபித்த இந்த சிறுவன் சட்டென மனதில் பதிந்தான்.

இந்த சம்பவத்தில் இரண்டு விஷயங்கள் புரிந்தது,

1. Sales and Marketing என்பது ஏதோ பெரிய பன்னாட்டு நிறுவனங்களுக்கு மட்டும் சொந்தமான வார்த்தையல்ல. திறமையும் அறிவும் இருந்தால் அவற்றை சில்லரை வணிகத்துக்குக் கூட பயன்படுத்தலாம்.

2. மயக்க Biscuit, மயக்க chocolate என நாள்தோறும் எத்தனை செய்திகள் வந்தாலும் நம் மக்களை திருத்த முடியாது.

பி.கு: இந்தியாவில் ஐந்து முதல் பதினான்கு வயதிற்குட்பட்ட குழந்தைத்தொழிலார்கள் (1999-2003) --> 14%

6 comments:

குருத்து said...

//பி.கு: இந்தியாவில் ஐந்து முதல் பதினான்கு வயதிற்குட்பட்ட குழந்தைத்தொழிலார்கள் (1999-2003) --> 14%//

இதற்காக வல்லரசாக முயற்சிக்கும், இந்தியா வெட்கி தலை குனிய வேண்டும்.

உங்கள் பதிவைப் போலவே, செல்வநாயகி என்பவர் ஒரு நல்ல பதிவு போட்டிருக்கிறார். படியுங்கள்

http://selvanayaki.blogspot.com

see - dec 4, 2006

பிரசாத் said...

அருமையான பதிவு!
நன்றி Socrates!

ரொம்ப பெரிசா இருக்கும் பதிவுகளைப் பார்த்தாலே எனக்கு கொஞ்சம் Allergy. அப்படியே படிக்க நேர்ந்தாலும் news paper headlines படிக்கிற மாதிரி ஒரு glance விடுவதோடு சரி. ஆனால் அதற்கு மாறாக இந்த பதிவு ஆரம்பித்ததில் இருந்து முடிவு வரை மிக நேர்த்தியாக சொல்லப்பட்டிருக்கிறது.

//உங்கள் பதிவைப் போலவே, செல்வநாயகி என்பவர் ஒரு நல்ல பதிவு போட்டிருக்கிறார். படியுங்கள்//

அவங்க பதிவை படிச்சதுக்கப்புறம் நான் போட்ட பதிவை செல்வநாயகியின் பதிவோடு compare பன்றதே பெரிய தப்புனு தோணுது…

குருத்து said...

அனுபவம் என்ற அடிப்படையில், இரண்டும் ஒன்று தான்.

வலைப்பதிவுகளில் செல்வநாயகி போல சீரியசாக எழுதுகிறவர்கள் ரெம்ப குறைச்சல்.

உங்களைப் போலவும், என்னை போலவும் உள்ளவர்கள் தான் அதிகம்.

அனுபவங்களை உள்வாங்கிக் கொண்டு, அசைபோட்டு, அழுத்தமாக எழுதுங்கள்.

நான் அப்படித்தான் முயற்சிக்கிறேன்.

பின்குறிப்பாய் : ஏன் பிரசாத் உங்கள் பதிவுகள் தமிழ்மணத்தில் வருவதில்லை.

"இடுகைகளில் புதுப்பிக்க" என்ற கட்டத்தில் உங்கள் முகவரி இடுங்கள். தமிழ்மணம் தங்கள் பதிவை இணைத்து கொள்ளும்

பிரசாத் said...

தமிழ்மனத்தில் பதிவுகளின் பட்டியலில் ஏற்கனவே இணைத்திருந்தேன். Blog Feeds’ஐ கொண்டு தானாக பதிவுகள் பட்டியலிடப்படும் என நினைத்திருந்தேன். “இடுகைகளில் புதுப்பிக்க" – வின் பயன் இப்போதுதான் புரிகிறது. உணர்த்தியமைக்கு மீண்டும் ஒரு நன்றி.

செல்வநாயகி said...

சாக்ரட்டீஸ், பிரசாத்,

என்னப்பா பண்ணிக்கிட்டிருக்கீங்க ரெண்டுபேரும்:)) எங்கேயோ சுற்றிக்கொண்டிருந்தேன் இணையத்தில். அதில் நூல் பிடித்து இங்குவந்து சேர்ந்தேன். பெரிதாக ஒன்றுமில்லை நண்பர்களே! உங்களில் ஒருத்தியாகத்தான் நானும். ஏதோ கண்டதைக் கேட்டதைக் கையிலிருக்கும் வார்த்தைகளில் வெளிப்படுத்திவிடுவது. நீங்கலெல்லாம் இப்படித் தொடர்ந்து வாசித்தும் அங்கங்கே அதை உச்சிமோந்து பாராட்டுவதும்தான் நெகிழ்வைத் தருகிறது எனக்கு. இந்த வலையுலகம் தேங்கிவிடாமல் உங்களைப் போன்ற ஆர்வமுள்ள, சிந்தனைநிறைந்த பதிவர்களால் தொடர்ந்து செல்லும். எழுதுங்கள் நிறைய. நன்றி உங்கள் வாசிப்பு மற்றும் பாராட்டுக்களுக்கு.

பிரசாத் said...

தங்கள் வருகைக்கு நன்றி செல்வநாயகி.
நாங்கள் இப்போதுதான் எங்கள் பயணத்தை தொடங்கி இருக்கிறோம்
முடிவில்லாத பயணத்தில் உங்களைப் போன்றவர்களின் எழுத்துக்களின் நிழலில்தான் சற்று நேரம் ஓய்வெடுத்துக்கொள்ள முடிகிறது

சுயநலத்துடன் கேட்கிறேன்!
நிறைய எழுதுங்கள்!!